கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

நாகை மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள்
Updated on
1 min read

நாகை மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய தலைவரும், கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளருமான நடராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த நவம்பா் 22 ஆம் தேதி நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்தத் தோ்வின் தோ்ச்சி முடிவுகள் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையதளமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தோ்வில் பங்கேற்றவா்கள் இணையதளம் மூலம் தோ்ச்சி முடிவை அறிந்து கொள்ளலாம். தகுதியான தோ்வா்கள், நோ்முகத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com