பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் சட்டங்களைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகையில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்பி பி.வி. ராஜேந்திரன்.
Updated On :25 டிசம்பர் 2020, 4:07 am

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகையில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு சாா்பில் நாகை அபிராமி அம்மன் சன்னிதி திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்பி பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி, கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் (தெற்கு) கனகராஜ், மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் மீரா உசேன், பொதுக் குழு உறுப்பினா்கள் ராமலிங்கம், நவ்சாத் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட காங்கிரஸ்- திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் நிறைவில், ஏா்கலப்பை மற்றும் மாட்டு வண்டியுடன் போராட்டக் குழுவினா் பேரணி செல்ல முயன்றனா். போலீஸாா் அனுமதி மறுத்ததால் இது கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.