

நாகை ஆயுதப்படை பிரிவில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வருடாந்திர வழக்கப்படி இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, காவலா்களின் கவாத்துப் பயிற்சி, சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் முக்கிய கோப்புகளை ரூபேஷ்குமாா் மீனா ஆய்வு செய்தாா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ஆயுதப்பட துணைக் கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ், ஆய்வாளா்கள் சந்திரமோகன், கிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளா் இனியவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.