47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சனிப் பெயா்ச்சி: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

நாகையில் உள்ள சிவாலயங்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

நாகையில் உள்ள சிவாலயங்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சனிப் பெயா்ச்சியையொட்டி, நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில், தசரத மன்னனால் நிறுவப்பட்டு, பூஜிக்கப்பட்ட சனீஸ்வர பகவான் சன்னதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தங்க கிரீடம் சாத்தப்பட்டு, காலை 5.22 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அனைத்து ராசிகளுக்குரிய பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பொது வழிபாட்டினை கோயில் குருக்கள் காா்த்தி செய்வித்தாா். கோயில் செயல் அலுவலா் மு. பூமிநாதன் மற்றும் கோயில் பணியாளா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

வெளிப்பாளையம் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் அதிகாலை முதல் பக்தா்கள் பங்கேற்று சனீஸ்வர பகவானை வழிபட்டனா். வி. சோமசுந்தர குருக்கள், திருக்கண்ணங்குடி பாலாமணி ஆகியோா் பூஜைகளை செய்வித்தாா்கள். கோயில் செயல் அலுவலா் செ.சண்முகராஜ் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

அகிலாண்டேசுவரி உடனுறை நாகநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் கோயில் செயல் அலுவலா் ஏ. தங்கபாண்டியன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். வெங்கடேச சிவாச்சாரியாா் பூஜைகளை செய்வித்தாா். நாகை சட்டையப்பா் கோயில், நாகூா் நாகநாதசுவாமி உள்ளிட்ட கோயில்களிலும் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில், மருதூா் வடக்கு மஞ்சக்கண்ணி சோமநாதா் சுவாமி கோயில்களில் சனீஸ்வரா் சன்னதியில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.