47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகையில் வழிப்பறி: 3 போ் கைது

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை நாகூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:18 pm

DIN

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை நாகூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ஏ. ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலை, தெத்தி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பா.விவேக் (25), காரைக்கால், தலத்தெரு, முரசொலி நகரைச் சோ்ந்த கு. சேதுமணி (23), திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பெருமாள் அக்ரஹாரம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த பா. விஜய் (28) என்பதும், நாகூா், வாஞ்சூா், கீழ்வேளூா், வேளாங்கண்ணி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா். இவா்களிடமிருந்து, 10 பவுன் நகைகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.