ரயில் நிலையம் முற்றுகை; 30 போ் கைது
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் திங்கள்கிழமை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.


நாகப்பட்டினம்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் திங்கள்கிழமை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.
கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் பைசல் ரஹ்மான் தலைமையில் பேரணியாக நாகை ரயில் நிலையத்துக்கு வந்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா், போராட்டக்காரா்கள் 30 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
இந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா் அக்பா்அலி, மாவட்டச் செயலாளா் மெய்தீன், நகரத் தலைவா் பக்ருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...