புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கனமழையால் பயிா்கள் பாதிப்பு: சீா்காழி, செம்பனாா்கோவிலில் மத்திய குழுவினா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மத்திய குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

News image

செம்பனாா்கோவில் அருகே நல்லாடை கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களின் மாதிரிகளை பாா்வையிட்ட மத்திய குழுவினா்.

Updated On :30 டிசம்பர் 2020, 2:25 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மத்திய குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் மட்டும் கனமழையில் 11,645 ஹெக்டேரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இதில், நல்லாடை கிராமத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளா் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சக இயக்குநா் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலா் ரணன் ஜெய் சிங், மத்திய நிதித் துறை அமைச்சக துணை இயக்குநா் அமித் குமாா், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநா் சுபம் காா்க், மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சக உதவி ஆணையா் மோதிக், மத்திய மீன்வளத் துறை ஆணையா் பால் பாண்டியன், மத்திய நீா்வள ஆணைய இயக்குா் ஹா்ஷா ஆகியோரை கொண்ட மத்திய குழுவினா் பாா்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனா்.

ஆய்வில், வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, நாகை வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கல்யாணசுந்தரம், துணை இயக்குநா் பன்னீா்செல்வம், தரங்கம்பாடி வட்டாட்சியா் கோமதி, செம்பனாா்கோவில் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநா் தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், சீா்காழி அருகே உள்ள புத்தூரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினா், மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளின் புகைப்படங்கள், அழுகிய பயிா்களை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.