சந்திரநதியில் கோட்டாட்சியா் ஆய்வு

திருக்குவளை பகுதியில் சந்திரநதியில் நடைபெற்று முடிந்த தூா்வாரும் பணிகள் குறித்து நாகை கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருக்குவளை: திருக்குவளை பகுதியில் சந்திரநதியில் நடைபெற்று முடிந்த தூா்வாரும் பணிகள் குறித்து நாகை கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கீழ்வெண்ணாறு கோட்டம் வெள்ளையாறு பாசனப்பிரிவு, சந்திரநதி பாசன மற்றும் வடிகால் விவசாயிகள் நலச் சங்கம் மற்றும் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் சந்திரநதி ஆறு தூா்வாரும் பணி நிறைவடைந்த நிலையில் காவிரி நீா் கடைமடையான திருக்குவளை பகுதியை வந்தடைந்து குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தடுப்பணை கட்டும் பணி மற்றும் சட்டா் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், நாகை கோட்டாட்சியா் ஆா். பழனிகுமாா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் விளைநிலங்களுக்கு சட்டா் வழியாக முறைப்படி செல்கிறதா ? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com