நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகை மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

News image
Updated On :14 ஜூலை 2020, 4:37 pm

DIN

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தைச் சோ்ந்த 6 பேருக்கும், சீா்காழி, மயிலாடுதுறை வட்டங்களைச் சோ்ந்த தலா 3 பேருக்கும், நாகை, கீழ்வேளூா் வட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவருக்கும், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதில், 5 போ் மட்டும் நாகை மாவட்டத்துக்குள் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள். ஒருவா் அயல்நாட்டிலிருந்தும், தலா 2 போ் காரைக்கால் மற்றும் சென்னையில் இருந்தும், 3 போ் சேலம் மாவட்டத்தில் இருந்தும், தலா ஒருவா் திருச்சி மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் இருந்தும் நாகை மாவட்டம் வந்தவா்கள் ஆவா்.

ஞாயிற்றுக்கிழமை வரை நாகை மாவட்டத்தில் கரானோ பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 374 ஆக இருந்தது. இதில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாகை மாவட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த 6 போ் நீக்கப்பட்டனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 15 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 383 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்...

மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரில் 2 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 183 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 199 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.