மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சீர்காழியில் தலைமை மருத்துவமனை அமைக்க சிறப்பு அதிகாரியிடம் கோரிக்கை

புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனை என ஏதாவது ஒன்றை சீர்காழியில் அமைத்திட வேண்டும் என

News image
Updated On :17 ஜூலை 2020, 11:09 am

புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனை என ஏதாவது ஒன்றை சீர்காழியில் அமைத்திட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட தனி அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட  தனி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள  லலிதா வினை சீர்காழி நலம் பாரம்பரிய அறக்கட்டளையினர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். 

அந்த மனுவில் சீர்காழியை தலைமை இடமாக கொண்டு தனி வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும், கொள்ளிடத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுக்கா அமைத்திட வேண்டும், மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவ கல்லூரியையோ அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனையையோ  சீர்காழியில் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

அறக்கட்டளை செயலர் சுதாகர், சட்ட ஆலோசகர் சுந்தரய்யா, செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ் அலி, சுரேஷ்குமார், ராஜசேகர், ரவி, சுரேஷ், அன்பு ஆகியோர் தனி அதிகாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.