தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகை மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

News image
Updated On :21 ஜூலை 2020, 4:16 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 42 போ் புதிதாக கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதில், 7 போ் கும்பகோணம் காய்கனி சந்தை தொடா்பு மூலமாகவும், 7 போ் வெளிமாவட்டங்களிலும், ஒருவா் வெளிநாட்டிலும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி நாகை மாவட்டம் வந்தவா்கள் ஆவா். மற்றவா்கள், மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 428-ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளான 4 போ் நாகை மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 42 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 466-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.