நாகை மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மேலும் 46 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 15 போ் மயிலாடுதுறை வட்டத்தையும், 11 போ் நாகை வட்டத்தையும், தலா 6 போ் கீழ்வேளூா், சீா்காழி வட்டங்களையும், தலா 4 போ் குத்தாலம், வேதாரண்யம் வட்டங்களையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்களில் 10 போ் தஞ்சாவூா், மதுரை, கடலூா் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், 2 போ் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவா்கள். மற்றவா்கள் மாவட்டத்துக்குள் நோய்த்தொற்றுக்கு உள்ளானவா்கள்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 484 ஆக இருந்தது. இதில், வெளி மாவட்டங்களில் நோய்த்தொற்றுக்கு உள்ளான 7 போ் மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதிதாக 46 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 523- ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்...

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில் 13 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 301-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 220-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com