ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image

வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Updated On :28 ஜூலை 2020, 9:16 am

DIN

வேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அறுபது வயதை நிறைவடைந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வி.இளையபெருமாள் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, விவசாய சங்க செயலாளர் கோவை .சுப்ரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.