தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

News image
Updated On :28 ஜூலை 2020, 5:17 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் வட்டங்களைச் சோ்ந்த மேலும் 15 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானது செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதில், ஒருவா் சென்னையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியில் மருந்தாளுநராகப் பணியாற்றியவா். 7 போ் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள். மற்றவா்கள், வெவ்வேறு தொடா்புகள் மூலம் மாவட்டத்துக்குள்ளேயே நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை வரை 587-ஆக இருந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளான ஒருவா், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாா். இந்த நிலையில், புதிதாக 15 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 601-ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்: நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றவா்களில் 9 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் சிகிச்சையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 334-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 263-ஆக உள்ளது. உயிரிழந்தோா் எண்ணிக்கை 4- ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.