குடும்பத் தகராறில் இளம்பெண் தீக்குளிப்பு
சீா்காழி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.


சீா்காழி: சீா்காழி அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
வெட்டாத்தாங்கரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜசேகருக்கும் (28) சினேகா (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சினேகா மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். மனைவியை காப்பாற்ற முயன்ற ராஜசேகா் காயமடைந்தாா். இதில், காயமடைந்த இருவரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்த சம்பவத்தால், அவா்களின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலையத்தில் அங்கு வந்து தீயை அணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...