கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சீர்காழியில் தீ விபத்து: 2 வீடுகள் எரிந்து நாசம்; 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்

சீர்காழியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் அதிலிருந்த நான்கு லட்சம் மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.

News image
Updated On :13 ஜூன் 2020, 3:34 am

சீர்காழியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் அதிலிருந்த நான்கு லட்சம் மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.

நாகை மாவட்டம் சீர்காழி நேரு காலனியில் வசித்து வருபவர் ராமு மனைவி பேபி. இவரது வீட்டில் இன்று அதிகாலை கூரையில் பற்றிய தீ மளமளவென அருகில் இருந்த கவிதா என்பவரது வீட்டிற்கு பரவியது. தொடர்ந்து வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் இரண்டு வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த ரூபாய் 4 லட்சம் மதிப்புடைய பொருள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. 

Story image

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மற்ற வீடுகளுக்கும் தீ பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே போல் சீர்காழி சட்டைநாதர் கோயில் வடக்கு கோபுர வாசல் அருகே உள்ள அர்ச்சனை பொருள்கள் , குளிர்பானங்கள் விற்பனை கடையில் நள்ளிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

Story image

தகவலின் பேரில் சீர்காழி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் கடையிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மற்ற கடைகள் பாதிப்பு இல்லாமல் தீ அணைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.