வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன. 
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Published on
Updated on
1 min read

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன. 

கரோனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 /- அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கடந்தவாரம் அறிவிப்பு வெளியிட்டனர். 

அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பொதுமக்கள் முக்கவசத்துடன் நடமாடினர். ஆனால் நேற்றுமுதல் மீண்டும் முககவசம் இன்றி நடமாடியதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக  ரூ.100 அபராதம் விதித்து கையடக்க கணினி இயந்திரம் மூலம் ரசீது வழங்கினர்.

பேரூராட்சி செயல் அலுவலர் குகன் மற்றும் துணை ஆய்வாளர் சேதுபதி தலைமையில் அபராதம் விதிக்கும் பணி நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com