பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2020, 2:41 pm

DIN

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

உடுமலை சங்கா் கொலை வழக்கில் 6 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு கூறியது. இதில் நீதி மறுக்கப்பட்டதாகக் கூறி, புதிய தமிழக கட்சியின் சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் முத்தழகன் தலைமை வகித்தாா், ஒன்றியச் செயலாளா் முரளி முன்னிலை வகித்தாா். நாகை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் தினேஷ் , ஒன்றிய இளைஞரணி செயலாளா்கள் கலைமணி, நிஷந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.