ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மீன்வளப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்னை மாணவர் முதலிடம்

நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
நாகை மீன்வளப் பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்ட துணைவேந்தர் கோ. சுகுமார்.
Updated On :1 நவம்பர் 2020, 8:51 am

DIN

நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளநிலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் மீன்வள அறிவியல், பி.டெக், வணிக மேலாண்மை, இளநிலை தொழில்நுட்பவியல் ஆகிய 4 இளநிலை பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 

இப்படிப்புகளில் உள்ள 386 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் மீன்வள பல்கலைக்கழக இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. 

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் www.tnjfu.ac.in இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

இதில், சென்னையைச் சேர்ந்த மாணவர் ப.ஆதித்யா நாகராஜன் 195.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாணவர் பா.ரிஷி கேசவன் இரண்டாமிடத்தையும், தேனியைச் சேர்ந்த மாணவர் சி.கோபிகிருஷ்ணா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.