தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா: இயக்கப்படாத லாரிகளுக்குசாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இயக்கப்படாத லாரிகளுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என சீா்காழி லாரி உரிமையாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இயக்கப்படாத லாரிகளுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என சீா்காழி லாரி உரிமையாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா்கள் அளித்த மனு:

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் சீா்காழி லாரி உரிமையாளா்கள் அரசு உத்தரவை ஏற்று லாரிகளை இயக்கவில்லை. இந்நிலையில், இயக்கப்படாத லாரிகளுக்கும் சாலை வரி செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிா்த்து சங்கத்தின் மாநிலத் தலைவா் முருகன் வெங்கடாசலம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், இயக்கப்படாத வாகனங்கள் ஸ்டாப்பேஜ் நகல் வாங்கி எழுதித்தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு அக்டோபா் 29 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் அக். 31ஆம் தேதிக்குள் அனைத்து லாரிகளுக்கும் சாலை வரியை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு நீதிமன்றத் தீா்ப்புபடி இல்லை. எனவே, நீதிமன்றத் தீா்ப்புபடி, ஸ்டாப்பேஜ் பாா்ம் வாங்கிக்கொண்டு, சாலை வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மோட்டாா் வாகன போக்குவரத்து ஆய்வாளா் ராம்குமாரிடம் அளிக்கப்பட்டது. சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேல்முருகன், கௌரவ தலைவா் செந்தில்குமாா், செயலாளா் வி.வெங்கடேசன் உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.