ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புயல் எச்சரிக்கை: வேதாரண்யத்தில் படகுகளை பாதுகாக்கும் பணியில் மீனவர்கள்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் தங்களது படகு மற்றும் வலை, இன்சின்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச்சென்றனர்.

News image
படகு மற்றும் வலை, இன்சின்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட மீனவர்கள்.
Updated On :22 நவம்பர் 2020, 2:05 pm

DIN

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் தங்களது படகு, இன்சின், வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஞாயிற்றுக்கிழமை தீவிரம் காட்டினர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில நாள்களில் புயலாக உருவெடுக்கும் வாய்யப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புயல் தமிழக கிழக்கு கடற்கரையில் கரையை கடக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடிப் படகுதளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story image

இந்த நிலையில், வேதாரண்யம், கோடியக்கரை மீன்பிடிப் படகுத்துறைகளில் வழக்கமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் சென்றனர். பல மீனவர்கள் படகு மற்றும் வலைகளை வாகனங்களில் ஏற்றி தங்களுது வீடுகளுக்கே கொண்டுச்சென்றனர். இதேபோல, வேதாரண்யம் பகுதியில் 2018-ல் வீசிய கஜா புயலின் அனுபவத்தைத்கொண்டு மக்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர்.

தென்னை உள்ளிட்ட மரங்களில் கிளைகளை வெட்டுவது, கூரைகளில் பாலிதீன் பாய்களை கட்டுவது, சிமிண்ட் அட்டைகள், தகர அட்டைகளை கீழே இறக்குவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.