சீர்காழியில் திமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 01:22 PM | Last Updated : 21st July 2020 01:22 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர திமுக சார்பில் தமிழ்நாடு மின் வாரியத்தை கண்டித்து சீர்காழியில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பாக நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இன்றி வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் ஏழை எளிய மக்களிடம் அதிகமாக மின் கட்டணம் வசூல் செய்யபடுகிறது. மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் அம்மாநில மக்களுக்கு மின்கட்டன சலுகைகள் வழங்கி உள்ளது.
ஆனால் அதிமுக அரசு மக்களிடமிருந்து மின் கட்டன கொள்ளையை நடத்தி வருகிறது என்று முழக்கங்களை எழுப்பினர்.