சென்னையிலிருந்து இ பாஸ் இல்லாமல் நாகை வந்த 2 பேர் கைது

சென்னையில் இருந்து வந்த 2 பேர் நாகை மாவட்ட எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற போது கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து இ பாஸ் இல்லாமல் நாகை வந்த 2 பேர் கைது

சென்னையில் இருந்து வந்த 2 பேர் நாகை மாவட்ட எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற போது கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தொற்று பாதித்த மாவட்டங்கள் வாரியாக ஒன்றிணைத்து ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் அங்கு பணிகளுக்கு சென்ற மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு இ.பாஸ் எடுத்து செல்கின்றனர். தற்பொழுது சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கடுமையான நடைமுறைகளை அரசு அமல்படுத்தியுள்ளதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் கடலூர் மாவட்டம் வெவ்வேறு மண்டலங்களில் வருவதால் இவ்விரண்டு மாவட்டங்களை இணைக்கும் இடமான கொள்ளிடம் பாலத்தில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்விரண்டு மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக கொள்ளிடம் பாலத்தில் அருகிலேயே ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. கொள்ளிடம் சோதனைச் சாவடியில் நடைபெறும் சோதனையில் இருந்து தப்பிப்பதற்கு இந்த ரயில்வே மேம்பாலத்தின் வழியாக சென்னையில் இருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக கடந்து தங்களது ஊருக்கு செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சென்னையிலிருந்து சட்டவிரோதமாக வாகனங்களில் பயணித்து கொள்ளிடம் ரயில்வே பாலத்தை  நடந்தே கடக்க முயன்ற கார்த்தி  உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் அவர்களை தனிமைப் படுத்தப் பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று அச்சத்தால் அங்கிருந்து  சட்டவிரோதமாக பயணித்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் சென்னையிலிருந்து இ பாஸ் இல்லாமல் காரில் வந்த இரண்டு பேரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com