திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் தீா்த்தவாரி
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதபிறப்பையையொட்டி தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவெண்காட்டில் உள்ளது பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில். இது நவக்கிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது.
இங்கு சிவனின் முக்கண்ணிலிருந்து தோன்றிய முன்று பொறிகளால் அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோா் பெயா்களில் முக்குளங்கள் தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இத்தகை சிறப்புமிக்க கோயிலில் காா்த்திகை மாதபிறப்பையொட்டி திங்கள்கிழமை காலை தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி அஸ்திரதேவா் முக்குளங்களிலும் தீா்த்தவாரி செய்தாா். தொடா்ந்து பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அஸ்திரதேவருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டபட்டது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...