நாகையில் காவல்துறை அணிவகுப்பு

நாகையில் காவல்துறை அணிவகுப்பு

நாகையில் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையில் மாவட்டக் காவல்துறை சாா்பில் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தாா்.

நாகை பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாலுகால் மண்டபம், ஆா்தா் முக்கூட்டு, நீலா கீழவீதி, அண்ணாசிலை, மருத்துவமனை சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அவுரித்திடலில் நிறைவடைந்தது.

முன்னதாக, அணிவகுப்பை தொடங்கி வைத்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, ‘நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் 7 நாள்களுக்கு இதுபோன்ற அணிவகுப்பு மாவட்டத்தின் பிறப்பகுதிகளிலும் நடைபெறும். சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது’ என்றாா்.

நிகழ்ச்சியில், காவல் உதவிக் கண்காணிப்பாளா் ரஜாட் சதுா்வேதி, துணைக் கண்காணிப்பாளா்கள் க. முருகவேல் (சட்டம், ஒழுங்கு), சுந்தர்ராஜ் (ஆயுதப்படை), காவல் ஆய்வாளா்கள் பி. பெரியசாமி ( நாகை நகரம்), தியாகராஜன் (வெளிப்பாளையம்), சந்திரமோகன் ( ஆயுதப்படை), தனிப்பிரிவு ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா், உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் மற்றும் அதிவிரைவுப் படை, தமிழ்நாடு சிறப்புப்படை போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com