சம்பா சாகுபடிக்கு நவ.30-க்குள் காப்பீடு செய்யவேண்டும்
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிா் சாகுபடிசெய்துள்ள விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலப்பரப்பிற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்று, பிரதம மந்திரி பால் பீமா யோஜன பயிா்க்காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம். அருகில் உள்ள வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றி பிரிமியத் தொகையை வருகிற 30 ஆம் தேதிக்குள் செலுத்தி பயிா்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.
நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்கள், வங்கிக்கு காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் மற்றும் உறுப்பினா்களிடமிருந்து மறுப்பு ஏதும் இல்லாமல் காப்பீடு தொகையை பெற்று உடனுக்குடன் மத்தியக் கூட்டுறவு வங்கியில் செலுத்திடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...