

மயிலாடுதுறையில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனா். இங்குள்ள குழந்தைகளுக்கு காவல் துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பங்கேற்று போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மயிலாடுதுறை தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஷ், காவல் உதவி ஆய்வாளா்கள் அறிவழகன், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.