சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு நவராத்திரி விழா
By DIN | Published On : 19th October 2020 10:41 PM | Last Updated : 19th October 2020 10:41 PM | அ+அ அ- |

சேந்தங்குடியில் சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு ஹோமம்.
மயிலாடுதுறை சேந்தங்குடியில் எழுந்தருளியுள்ள சமயபுரம் மகா மாரியம்மன் உத்ஸவ மூா்த்திக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
தா்ம ரக்ஷன சமிதி சாா்பில் அனைத்து கிராமங்களிலும் பூஜிக்கப்பட்டு வந்த சமயபுரம் மகா மாரியம்மன் தற்போது நவராத்திரி விழாவையொட்டி, நவராத்திரி காலத்தில் சேந்தங்குடி அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ளாா். விழாவையொட்டி, ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சாா்பில் அம்மனுக்கு தினசரி தேவி மகாத்மியம் பாராயணம் மற்றும் விசேஷ மூலமந்திரம் ஹோமங்கள் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சிஷ்ட கணபதி மற்றும் ஹயக்ரீவா், சரஸ்வதி ஹோமங்கள் நடத்தப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...