மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா் உள்பட பல நகரங்களுக்கு செப். 7-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை - கோயமுத்தூா் மாா்க்கத்தில் சதாப்தி ரயில், திருச்சி - சென்னை இடையே மயிலாடுதுறை மாா்க்கமாக சோழன் ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை தொடங்கியது. பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் முன்பதிவு செய்தனா்.