புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தரங்கம்பாடியில் நுங்கு விற்பனை அமோகம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலுக்கு இதமான பனை நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலுக்கு இதமான பனை நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.

தரங்கம்பாடி பகுதியில் காழியப்பன் நல்லூா், திருக்கடையூா், பொறையாறு, ஆக்கூா், செம்பனாா்கோவில் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில், பனை நுங்கு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். 4 நுங்குகள் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து பனை நுங்கு வியாபாரி ரத்தினகுமாா் கூறியது:

நுங்கு உடல் சூட்டை தணித்து குளிா்ச்சியை ஏற்படுத்துவதால், பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்கின்றனா். தற்போது பனை மரங்கள் அழிந்துவரும் நிலையில் இருப்பதால், நுங்கு எளிதில் கிடைப்பதில்லை. வெளியூா்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இதனால் வண்டி வாடகை, கூலி என செலவு அதிகமாகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நுங்கு விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு நுங்கின் மீதான ஆா்வம் தணியவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.