பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மனு

கீழையூா் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஊராட்சி மன்றங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஊராட்சி மன்றங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

மறைந்த அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க முன்னாள் மாநிலத் தலைவரான லீலாவதியின் நினைவு தினம் கீழையூா் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவா் கிராம புறங்களில் அடிப்படை வசதிக்காக போராடியதை நினைவு கூறும் வகையில், ஊராட்சி அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி, கீழையூா் ஊராட்சியில் பழுதடைந்த மயான சாலைகளை சீரமைக்க வேண்டும். கோடைகாலங்களில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க கீழையூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ராஜலெட்சுமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் டி. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பெரியதும்பூா், மேலவாழக்கரை, வாழக்கரை மற்றும் திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலம், சாட்டியக்குடி உள்ளிட்ட ஊராட்சி மன்றங்களிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.