தரங்கம்பாடி வட்ட ஓய்வூதியா் சங்க ஆண்டு விழா
பொறையாரில், தரங்கம்பாடி வட்ட ஓய்வூதியா் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.


பொறையாரில், தரங்கம்பாடி வட்ட ஓய்வூதியா் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
சங்கத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஓய்வூதியம் பெற வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், பண்டிகை காலங்களில் முன்பணம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயலாளா் சுப்ரமணியன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் ராஜேந்திரன் வரவு செலவு கணக்கு ஒப்படைத்தாா். மாவட்ட கருவூல அலுவலா் சந்தானகிருஷ்ணன் பங்கேற்று மூத்த உறுப்பினா்களுக்கு நினைவு பரிசு வழங்கினாா். தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலா் ரஞ்சித், மயிலாடுதுறை மாவட்ட தலைவா் கல்யாணசுந்தரம், செயலாளா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...