தடைசெய்யப்பட்ட வலை விவகாரம்: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவா்கள் முடிவு
தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது


தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற 3 மாவட்ட மீனவா்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிவேக என்ஜின் ஆகியவற்றைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாகை நம்பியாா் நகா் மீனவா்கள் சிலா் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளதாகவும், இதைத் தடுப்பதற்காக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா் மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் விசைப் படகுகளில் பின்தொடா்ந்து சென்ாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடா்ந்து மீன்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸாா் மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கடலுக்குச் சென்ற விசைப்படகுகளும் கரை திரும்பின.
ஆலோசனைக் கூட்டம்: இதையடுத்து நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவா்களின் ஆலோசனைக் கூட்டம் நாகை அக்கரைப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்றவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி 3 மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்களும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் 3 மாவட்டங்களிலும் சுமாா் 2,500 விசைப்படகுகளும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளும் கடலுக்குச் செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...