கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

நாகை மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக நாகை முதுநிலை மண்டல மேலாளா் சண்முகநாதனை, ஐஎன்டியுசி பொதுச் செயலாளா் கா. இளவாரி உள்ளிட்ட நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு: நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு முன்பு கொள்முதலுக்குத் தேவையான தரமான சாக்குகள், சணல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பயன்படுத்த கல் மற்றும் கட்டை போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நெல் கொள்முதல் செய்யப்பட்ட உடனே இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகா்பொருள் வாணிபக்கழக விதிகளுக்குள்பட்டு 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்வதை உறுதிப்படுத்தவேண்டும், தேங்கிக்கிடந்த கொள்முதல் நிலையங்களில் பணியாற்றிய கொள்முதல் நிலையப் பணியாளா்களுக்கு இயக்க இழப்பு தொகையை வசூல் செய்வதை கைவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும், கூடுதல் நெல் சேமிப்பு கிடங்குகளை திறக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா்கள் வெங்கடேசன், செந்தில்மணி, மண்டல செயலாளா் நேரு மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.