வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: குறைவானப் பக்தர்கள் பங்கேற்றனர்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா-2021 திருக்கொடியேற்றம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக  குறைவான பக்தர்களின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம்.
Updated on
2 min read

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா-2021 திருக்கொடியேற்றம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக  குறைவான பக்தர்களின் பங்கேற்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இப்பேராலயம், கீழை நாடுகளின் லூர்து எனக் குறிப்பிடப்படுகிறது.

இங்கு,ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டில்  வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவை முன்னிட்டு திருக்கொடி பவனி நடைபெற்றது. மாலை 4.30  மணிக்கு கீழ்க்கோயில் முகப்பிலிருந்து தொடங்கிய கொடி ஊர்வலம் பேரணி, பேராலயத்தை வளம் வந்து பின்னர் மீண்டும் பேராலய முகப்பில் நிறைவடைந்தது. 

தொடர்ச்சியாக மாலை 5- மணிக்கு  தஞ்சை மறை மாவட்ட ஆயர்எம்.தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியைப் புனிதம் செய்வித்தார். பின்னர் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, மாலை 5.  மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.

 பேராலய அதிபர்  ஏ.எம். ஏ. பிரபாகர் அடிகளார், நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ், மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர், பேராலய பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்குதந்தையர்கள் உடனிருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com