108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு

திருக்குவளை அருகே கச்சநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை அருகே கச்சநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கச்சநகரம் கீழதெருவில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க. புஷ்பா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் சி. மணிகண்டன், தை. லீனஸ் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் என். ராஜேந்திரன் வரவேற்றாா். இம்மையத்தில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் தன்னாா்வலா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக பள்ளி ஆசிரியா் எஸ். சேகா் நன்றி கூறினாா்.

முன்னதாக, இத்திட்டத்தின் விழிப்புணா்வு கலைக்குழு சாா்பில் மாணவா்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டு, குத்து விளக்கேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.