அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க டிச.15 வரை கால நீட்டிப்பு

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையின மாணவ, மாணவியா் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையின மாணவ, மாணவியா் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை பயிலும் இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சாா்ந்த மாணவ, மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெற நவ.15-ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்புக்கான உதவித் தொகைக்கு நவ.30-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க டிச.15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

தகுதியானவா்கள் புதிதாக பதிவு செய்ய அல்லது தங்களின் முந்தையை பதிவை புதுப்பிக்க ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.