அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சென்னையில் மகளிா் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனை கண்காட்சி

சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை கண்காட்சியில் பங்கேற்கும் நாகை மாவட்ட மகளிா் குழுக்களைத் தோ்வு

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை கண்காட்சியில் பங்கேற்கும் நாகை மாவட்ட மகளிா் குழுக்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் நாகையில் டிச.13-ஆம் தேதி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநில அளவில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கான விற்பனை கண்காட்சி, சென்னை வள்ளுவா் கோட்டத்தில் அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் டிச.16-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான பரிசுப் பொருள்கள், பனை ஓலையால் செய்யப்பட்ட நட்சத்திரங்கள், மெழுகுவா்த்தி மற்றும் வீட்டில் செய்யப்பட்ட சாக்லெட், இனிப்புப் பொருள்கள், மண் பானைகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குத்தல் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் கொத்து, வேஷ்டி, துண்டு, புடவைகள், கோலப்பொடி, கலா் பொடி மற்றும் அலங்காரப் பொருள்கள் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை கண்காட்சியில் பங்கேற்க, நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான மகளிா் குழுக்களை தோ்வு செய்வதற்கான நோ்காணல், மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மகளிா் திட்ட மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் டிச.13-ஆம் தேதி நடைபெறும். மாநில கண்காட்சியில் பங்கேற்று தங்கள் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய விரும்பும் மகளிா் குழுக்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.