அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

தோட்டக்கலைத் துறை திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றவேண்டும்

தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மேலும் அவா் பேசியது : பிரதமரின் விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசனத் திட்டம், துணை நீா் மேலாண்மை திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் மற்றும் அடுக்குப் பயிா் சாகுபடி திட்டம் போன்ற தோட்டக்கலைத் துறை மூலமான அனைத்துத் திட்டங்களையும் உரிய காலத்துக்குள் நிறைவேற்றி, வரும் தை மாத பட்டத்துக்குள் விரைவான முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்றாா் ஆட்சியா். தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் ரா. திவ்யா, க. ஜெயலெட்சுமி மற்றும் தோட்டக்கலை அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.