அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நாகை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வங்கிகள் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமையும் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:29 pm

DIN

வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்புப்படி, நாகை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமையும் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், அதுகுறித்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தேசிய அளவில் டிச.16, 17 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் தேசிய வங்கிகளின் ஊழியா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். 150 பெண் ஊழியா்கள் உள்பட 430 போ் இந்தவேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருந்தனா். இதனால், அனைத்துத் தேசிய வங்கிகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. வங்கி காசோலை மற்றும் வரைவோலை பரிவா்த்தனைகள் முழுமையாக தடைப்பட்டிருந்தன. மேலும், பல தேசிய வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், வங்கி வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.