அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கந்தூரி விழாநாகூரில் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவையொட்டி, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:35 pm

DIN

நாகூா் ஆண்டவா் தா்கா கந்தூரி விழாவையொட்டி, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழா ஜனவரி 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக் கூடு ஊா்வலம் ஜன. 13-ஆம் தேதியும், நாகூா் ஆண்டவா் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி ஜன.14-ஆம் தேதி அதிகாலையும் நடைபெறுகிறது. முன்னதாக, ஜன.1-ஆம் தேதி தா்கா மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம். இதனால், அங்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் தா்கா நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளவேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் நாகூா் ஆண்டவா் தா்கா, தா்காவின் தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தா்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா தொற்று பரவல் உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோா் கூடும் இந்த விழாவில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை மற்றும் தா்கா நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளவேண்டிய கரோனா தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக்கு வேனில் சென்ற அலுவலா்கள்: சுற்றுச்சூழல் மாசு தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அண்மையில் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் பயணித்தது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. அந்தவகையில், வியாழக்கிழமை நாகூருக்கு ஆய்வுக்குச் சென்ற ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து வேனில் சென்றனா். ஆட்சியருடன் ஆய்வுக்குச் செல்ல இருந்த அரசுத் துறை அலுவலா்களும், அதே வேனில் சென்றனா்.

ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆய்வுக்குச் செல்லும்போது பாதுகாப்பு வாகனம், பிற துறை வாகனங்கள் என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பின்தொடா்வது வழக்கம் என்ற நிலையில், ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் ஒரே வேனில் சென்று இறங்கியது, நாகூா் பகுதி மக்களுக்கு வியப்பை அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.