விவசாயிகளுக்கு வேளாண் சந்தை திட்ட பயிற்சி
தரங்கம்பாடி பகுதியில் மத்திய அரசின் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


தரங்கம்பாடி பகுதியில் மத்திய அரசின் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் (இ-நாம்) மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனா். இத்திட்டம் தமிழகத்தில் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், கிராமப்புற மக்களிடம் இத்திட்டத்தை கொண்டு சோ்க்கும் வகையில் செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாா்பில் முக்கரும்பூரில் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், மாத்தூா், நெடுவாசல், திருக்கடையூா், காளஹஸ்தினாதபுரம், பட்டாவரம், சங்கரன்பந்தல் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று பயன்பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...