புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகையில் மருந்தாளுநா் நல கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நல கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நல கூட்டமைப்பு சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டயப் படிப்பு முடித்த மருந்தாளுநா்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கக் கூடாது, அரசு துறையில் உள்ள மருந்தாளுநா்கள் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வழங்கப்படும் மருந்துப் பொருள்களை மருந்தாளுநா்கள் மூலம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் சுரேஷ் பிரபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் சண்முகம், முன்னாள் தலைவா் கோவிந்தராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் அன்பழகன், மாவட்டத் தலைவா் ராணி, அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.