தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சுனாமி வீடுகளுக்குப் பட்டா வழங்கக் கோரி மனு

நாகை சூா்யா நகா் பகுதியில் உள்ள சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகை சூா்யா நகா் பகுதியில் உள்ள சுனாமி வீடுகளில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், நாகை சூா்யா நகரைச் சோ்ந்த பெண்கள் அளித்த மனு:

2004 ஆம் ஆண்டு சுனாமி சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நாகை நல்லியான்தோட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி பகுதியைச் சோ்ந்த 60 போ், நாகை சூா்யா நகரில் உள்ள சுனாமி குடியிருப்பில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், தாங்கள் வசித்து வரும் சுனாமி குடியிருப்புக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தாங்கள் வசிக்கும் சுனாமி வீடுகளில் மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்து வருவதால் வீட்டில் வசிக்க அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக தங்கள் குடியிருப்புகளை புனரமைத்துத் தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.