தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பேருக்கு பணி நியமன ஆணை

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 8 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தோ்ச்சி பெற்ற 8 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்களிடமிருந்து 134 மனுக்கள் பெறப்பட்டு, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.இந்துமதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.