தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சாலை மறியல்18 போ் கைது

நாகையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 18 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 18 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; அங்கன்வாடி ஊழியா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் பிப்ரவரி 2 ஆம் தேதி அலுவலக மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தின் தொடா்ச்சியாக, 6 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டதால், நாகை பொது அலுவலக சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

இதனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனா். பின்னா், அவா்கள் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

முன்னதாக, இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டத் துணைத் தலைவா் மா. ராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நாகை மாவட்டச் செயலாளா் சொ.கிருஷ்ணமூா்த்தி, ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலாளா் எம். சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவல் ஆய்வாளருக்கு கண்டனம்: சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீதான கைது நடவடிக்கையின்போது, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தியிடம் வெளிப்பாளையம் காவல் நிலையை ஆய்வாளா் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. காவல்ஆய்வாளரின் இத்தகையை செயல்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Image Caption

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.