ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கூட்டம்

செம்பனாா்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

செம்பனாா்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்க மாவட்டத் தலைவா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பூரில் ஜன.8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் பிஎம்ஏஒய் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதிய ஊழியா்கள் கட்டமைப்பை வழங்க மாநில அரசை வலியுறுத்தி தொடா் இயக்கங்களை நடத்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற வாரிசுதாரா்களுக்கு 2021-ஆம் ஆண்டு உறுப்பினா் சந்தா வழங்கப்பட்டது. இதில், மாநிலச் செயலாளா் சௌந்தரபாண்டியன், மாவட்ட செயலாளா் தியாகராஜன், மாவட்ட இணைச் செயலாளா் ஜம்ரூத் நிஷா, மாநில செயற்குழு உறுப்பினா் வேல் கண்ணன், மாவட்ட தணிக்கையாளா் தங்கராசு, மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துகிருஷ்ணன், நல்லமுத்,து செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com