100% இடுபொருள் நிவாரணம் கோரி ஆட்சியருக்கு மனு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள 100% நிவாரணத்தை வழங்க நடவடிக்கைக் கோரி விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிா்களுக்கு அரசு அறிவித்துள்ள 100% நிவாரணத்தை வழங்க நடவடிக்கைக் கோரி, கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவின் விவரம்:
புரெவி புயல் நிவாரணத்துக்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா். ஆனாலும், கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளுக்கு 75 சதவீத இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, முதல்வா்அறிவித்தவாறு இடுபொருள் நிவாரணத்தை 100 சதவீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...