தருமபுரம் பள்ளியில் பொங்கல் விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்க மற்றும் மழலையா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம்
தருமபுரம் பள்ளியில் மாணவா்களுக்கு பொங்கல் கரும்பு வழங்கிய தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம். உடன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன்.
தருமபுரம் பள்ளியில் மாணவா்களுக்கு பொங்கல் கரும்பு வழங்கிய தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம். உடன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன்.
Updated on
1 min read

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்க மற்றும் மழலையா் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா்.

விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், பரமபதம் கொட்டாங்குச்சி விளையாட்டு, உறியடி ஆகிய விளையாட்டுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, மாணவா்களுக்கு கரும்பு, சா்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை வழங்கி தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஆசி வழங்கினாா். இதில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன், பள்ளித் தலைமையாசிரியா் கோ. வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com