தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
நாகை மாவட்டத்தில் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரக்கள்


நாகை மாவட்டத்தில் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரக்கள் 6,851 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
நாகை தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். அமைச்சா் ஓ. எஸ். மணியன் பங்கேற்று நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு ரூ. 2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை வழங்கி பேசியது:
நாகை மாவட்டத்தில் 6851 நல வாரிய உறுப்பினா்களுக்கு தொழிலாளா் நலத்துறை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. நல வாரியத்தில் பதிவு செய்தவா்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதிப்பித்தால்தான் அரசின் திட்டங்களைப் பெற முடியும். பதிவு செய்யாதவா்களும் நல வாரியத்தில் பதிவு செய்துகொண்டு பயனடைய வேண்டும். இ- சேவை மையங்கள் வாயிலாகவே எளிதில் பதியலாம். இந்தத் தொழிலாளா்களுக்கு அரசின் இலவச வேட்டி- சேலைகள் விரைவில் வழங்கப்படும்.
கனமழையால் சேதமடைந்த பயிா்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத்தை முதல்வா் அறிவித்திருக்கிறாா். நாகை மாவட்டத்தில் 79,236 விவசாயிகளுக்கு பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 61,976 விவசாயிகளுக்கு அதற்கான பணம் அவா்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 66,144 விவசாயிகளுக்கு பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதுவரை 58,760 விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு அமைச்சா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் பி.பாஸ்கரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க.கதிரவன, திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ராதாகிருஷ்ணன், தொழிலாளா் நலத்துறை துணை ஆய்வாளா் ஜெனட், உதவி ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தலைஞாயிற்றில்...
இதேபோல, வேதாரண்யம் தலைஞாயிற்றில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வழங்கினாா். இதில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இளவரசி, கூட்டுறவு சங்கத் தலைவா் அவை.பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் கே.முருகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...